Qatar approves fourth dose of COVID-19 vaccine
நான்காவது கொரோனா தடுப்பூசிக்கு கத்தார் சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. Pfizer/BioNTech and Moderna போன்ற தடுப்பூசிகள் நான்வாது தடுப்பூசியாக செலுத்துக் கொள்ள முடியும் என்பதாக சுகாதார அமைச்சின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவுக்தெதிரான இந்த நான்காவது தடுப்பூசியானது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாள்பட்ட நோயுடைய வயோதிபர்கள், மற்றும் முதுமை காரணமாக விரைவாக தொற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. குறிப்பாக கொரோனாவின் 3வது தடுப்பூசி பெற்று நான்கு மாதங்கள் நிறைவடைந்தவர்கள் மாத்திரம் இந்த நான்காவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள தகைமையுடையவர்கள் என்பதாக அமைச்சு தெளிவு படுத்தியுள்ளது.
புள்ளி விபரங்களின் அடிப்படையில் வெளிநாடுகளில் 4வது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக கிடைக்கப்பட்ட விஞ்ஞான ரீதியான புள்ளி விபரங்களினை அடிப்படையாக் கொண்டு கத்தாரிலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது கொரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கத்தார் சுகாதார அமைச்சு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கத்தார் பிரபல உணவகத்தின் ஒன்பது கிளைகளுக்கு சீல் வைத்தது வர்த்தக அமைச்சு!