கத்தாரில் நோன்புப் பெருநாள் திங்கட் கிழமை கொண்டாடப்படும் – உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியானது

கத்தாரில் நோன்புப் பெருநாள் திங்கட் கிழமை (மே-02) கொண்டாடப்படும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கத்தாரில் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கூடிய கத்தார் பிறை கமிட்டி இந்த முடிவு அறிவித்துள்ளது.

பிறை கமிட்டியின் தலைவர் Sheikh Dr Thaqil Al Shammari, அவர்கள் சற்று நேரத்திற்கு முன்னால் கத்தார் தொலைக்காட்சிக்கு இந்த செய்தியை வழங்கி வைத்தார்கள்.

அந்த வகையில் கத்தார் உட்பட அரபு நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் நாளை தினம் 2022ம் ஆண்டுக்கான 30வது ரமழான் நோன்பை நோற்கும் வாய்ப்பை் பெற்றுள்ளார்கள்.

கத்தாரில் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலையில் தெரிவு செய்யப்பட்ட மசூதிகள், மற்றும் தைானங்களில் பெருநாள் தொழுகை நடைபெறும் என்பதாக அவ்காப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கத்தார் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் 2022ம் ஆண்டுக்கான நோன்புப் பொருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

– EID MUBARAK –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *