Doha Corniche decorated by locally made light poles
கத்தாரின் பொது இடங்கள் மற்றும் பாதைகளை அழபடுத்துவதற்கான கண்காணிப்புக் குழு தான் ஒரு புதிய அடைவை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. கத்தார் – டோஹா நகரில் அமைந்துள்ள கொர்னிச் சாலை முழுதும் 557 உள்ளூர் உற்பத்தி அலங்கார விளக்குகள் மூலம் அழகு படுத்தும் செயற்றிட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக மேற்படி குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2022 ஆண்டு காலாண்டு பகுதியில் 1210 அலங்கார விளக்குக் கம்பங்கள், 10 கிலோ மீற்றரில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன. இதற்காக பொதுப்பணி அதிகார சபை தன்னுடன் இணைந்து பணியாற்றியதாகவும் குழு தெரிவித்துள்ளது.
பொதுப்பணி அதிகார சபையானது உள்ளூரில் அலங்கார விளக்குக் கம்பங்களை உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை செய்து இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவடைய ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், இது போன்ற அழகுபடுத்தும் பணிகள் மேலும் விஸ்ரிகரிக்கப்படும் என்பதாகவும், பொது இடங்கள் மற்றும் பாதைகளை அழபடுத்துவதற்கான கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரமழான் பண்டிகையை வரை கத்தார் மெட்ரோவின் சேவை நேரங்கள் அதிகரிப்பு!