ரமழான மாதத்தை முன்னிட்டு அதிகளவு போக்குவரத்து பொலிஸார் ரோந்து பணியில்!

Qatar to deploy more patrols during Ramadan

Qatar to deploy more patrols during Ramadan

ரமழான மாதத்தை முன்னிட்டு அதிகளவு போக்குவரத்து துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வீதி விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கத்தார் முழுதும் அதிகளவு போக்குவரத்து அதிகாரிகளை ரோந்துப் பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக கத்தார் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டுநர்கள் வேகக் கட்டுப்பாட்டு அளவை தவறாமல் பின்பற்றி வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நோன்பு திறப்பதை நோக்காகக் கொண்டு வாகன ஓட்டுநர்கள் அதி வேகத்தில்
வாகனம் செலுத்துவதனால் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுகின்றன.

கத்தார் போக்குவரத்து துறையின் பிரதான Fahd Buhend அவர்கள் கத்தார் வானொலிக்கு வழங்கியே செவ்வியிலேயே
இதனைத்தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இது பற்ற அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது,

எதிர்வரும் புனித ரமழானை முன்னிட்டு அதிகளது போக்குவரத்து அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். இதற்காக விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன்னரும், இரவு நேரத்தொழுகைக்கு பின்னரும் வாகன நெறிசல்கள் அதிகரிக்கும் வேளைகளில் அதிகளவு அதிகாரிகள் பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள்.

மேலும், வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மதித்து வாகனங்களை செலுத்தி, சீரான வாகனப் பயணங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், பாடசாலைகள், உணவகங்கள், இனிப்பு விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றிற்கு முன்னால் போக்குவரத்து அதிகாரிகள் தரித்து நின்று பணி புரிவார்கள் என்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு 800க்கு மேற்பட்ட உணவுப் பொருட்களின் விலையை குறைத்தது கத்தார் அரசு!

Leave a Reply