முழுமையான தடுப்பூசி பெற்று கத்தார் திரும்புவோருக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தல் கிடையாது! பெப்-28 முதல் புதிய நடைமுறை!

Qatar removes hotel quarantine for fully vaccinated Travellers

Qatar removes hotel quarantine for fully vaccinated Travellers

கத்தாரின் பொது சுகாதார அமைச்சு எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி முதல் புதிய பிரயாணக்கப்பட்டுப்பாடுகள் தொடர்பான விதிகளை அறிவித்துள்ளது. இந்த விதிகள் திங்கட்கிழமை கத்தார் நேரப்படி இரவு 7 மணி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கத்தாரில் அண்மைக்காலமாக கொரோனாவின் தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

கொரோனாவின் தாக்கம் அடிப்படையில் வெளிநாடுகளை பச்சைப் பட்டியல் நாடுகள், சிவப்பு பட்டியல் நாடுகள் மற்றும் விதிவிலக்கான பட்டியலில் உள்ள நாடுகள் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டு வெற்வேறான பயணக் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படவுள்ளன.

பங்களாதேஷ், எகிப்து, ஜோர்ஜியா, இந்தியா, ஜோர்தான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பச்சைப் பட்டியல் நாடுகளிலிருந்து கத்தாருக்கு வருகை தரும் பயணிகள்(QID Holders) , கத்தாருக்கு வர முன்னர் PCR பரிசோதனை அவசியமில்லை எனவும், முழுமையாக தடுப்பூசியைப் பெற்றவர்கள் அல்லது கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் ஹோட்டல் தனிமப்படுத்தலில் இருந்து விதிவிலக்களிக்கப்பட்டுள்ளனர். என்றாலும் கத்தாருக்குள் பிரவேசித்து 24 மணித்தியாலங்களுக்குள் அன்டீஜன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி பெறாதவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்  5 நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும், கத்தாருக்குள் பயணிப்பதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் PCR  பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதோடு, 5 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தும் போது அன்டீஜன் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிவப்பு பட்டியல் நாடுகளைச் சேர்ந்த பிரயாணிகள் (QID Holders) , கத்தாருக்கு வர முன்னர் PCR பரிசோதனை அவசியமில்லை எனவும் முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்றிருந்தால், அல்லது கொரோனா தொற்றிலிருந்து மீண்டிருந்தால் ஹோட்டல் தனிமைப்படுது்தல் அவசியமில்லை என்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. என்றாலும் கத்தாருக்குள் பிரவேசித்து 24 மணித்தியாலங்களுக்குள் அன்டீஜன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவப்பு பட்டியல் நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி பெறாதவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கத்தாருக்குப் பயணிக்க 48 மணித்தியாலங்களிற்குள் PCR பரிசோதனை செய்து மறை சான்றிமழைப்  பெற்றிருக்கவேண்டும்.  கத்தாரை வந்தடைந்து 24 மணித்தியாலங்களுக்குள் மீண்டும் கத்தாரை வந்தடைந்த PCR செய்து கொள்ள வேண்டும். பின்னர்   5 நாட்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும், 5 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் அன்டீஜன் சோதனையை செய்து கொள்ள வேண்டும் என் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பச்சை நிறப்பட்டியல் நாடுகளிலிருந்து கத்தாருக்கு சுற்றுலா நோக்கில் வருகை தருபவர்கள் கத்தாருக்கு பயணிக்க 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் PCR செய்து மறைச் சான்றிதழைப்பெற்றிருக்க வேண்டும். முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்தால் தனிமைப்படுத்தலில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவார்கள். தடுப்பூசி பெறாதவர்களாக இருந்தால் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தனிமப்படுத்தலை நிறைவு செய்யும் போது அன்டீஜன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சிவப்புப் பட்டியல் நாடுகளிலிருந்து கத்தாருக்கு சுற்றுலா நோக்கில் இரு தடுப்பூசிகளையும் பெற்று வருபவர்கள் கத்தாருக்கு பயணிக்க 48 மணித்தியாங்களுக்கு முன்னர் PCR பரிசோதனை செய்து மறைச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். கத்தாரை வந்தடைந்ததும் ஒரு நாள் தனிமைப்படுத்தப்படுவதோடு அன்டீஜன் பரிசோதனை  செய்து கொள்ள வேண்டும். தடுப்பூசி எதனையும் பெறாத சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரிலிருந்து இலங்கைக்கான தினசரி 5வது விமானச் சேவையை ஆரம்பித்தது கத்தார் ஏர்வெய்ஸ்

Qatar removes hotel quarantine for fully vaccinated Travellers

Leave a Reply