கத்தாரில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் 7 நாட்களாக குறைக்கப்பட்டது

கத்தாரில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கத்தாரில் இதுவரை காலமும் கொரோனா நேர்மறை (Positive) என்பதாக அடையாளம் காணப்பட்டவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர். இந்த நடைமுறையானது 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இவ்வாறு கொரோனாவினால் பாதிக்கப்படுவர்கள் Ehteraz  செயலியில் சிவப்பு நிறத்தைப் பெறுவார்கள். அத்துடன் அவர்களுக்கு 7 நாட்கள் நோய்வாய்ப்பட்ட விடுப்பு (sick leave) பெறுவார்கள். மேலும் 7 வது நாளின் அன்டீஜன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேற்படி பரிசோதனையின் போது பெறுபேறு எதிர்மறையாக (Negative) இருக்கின்ற போது, Ehteraz   செயலியின் நிறம் ஆரோக்கிய குறியீடான பச்சையாக மாறும். அத்துடன் 8 நாளியில் இருந்து அவர்கள் மீள பணிக்குத்  திரும்ப முடியும்.

மாற்றமாக பரிசோதனையின் பெறுபேறு நேர்மறை (Positive)  இருந்தால் மேற்படி நபர் மேலும் 3 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்.  11வர் நாளில் அவர்கள் பரிசோதனையின்றி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 10 நாட்களானது 7 நாட்களாக குறைக்கப்பட்டமையானது அண்மையாக காலமாக மேற்கொள்ளப்பட்ட விசேட மதிப்பாய்வின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது என்பதாக சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், பொது மக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளைப் பேணி, கொரோனாவிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் படி சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *