கத்தாரில் மசூதிகளில் தொழுகையின் போது மீண்டும் சமூக இடைவெளி, 12 வயதிற்கு குறைந்தவர்களுக்கு அனுமதியில்லை!

Qatar announces social distancing measures at mosques

கத்தாரில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலைியில் மசூதிகளில் தொழுகையின் போது சமூக இடைவெளிகளைப் பின்பற்றவும், , 12 வயதிற்கு குறைந்தவர்களை அனுமதிக்காது இருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் இஸ்லாமிய விவகாரங்களுப்புப் பொறுப்பாக உள்ள அமைச்சு (அவ்காப்) பின்வரும் புதிய கட்டுப்பாடுகளை எதிர்வரும் சனிக்கிழமை முதல் பின்பற்றப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

  • ஐவேளைத் தொழுகையின் போதும், வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் போதும் சமூக இடைவெளி ஒரு மீற்றர் தூரம் கடைபிடிக்கப்படும்
  • வெள்ளிக்கிழமை ஜும்ஆத் பிரசங்கத்தின் போதும் சமூக இடைவெளி ஒரு மீற்றர் தூரம் கடைபிடிக்கப்படும்
  • தெரிவு செய்யப்பட்ட மசூதிகளில் மாத்திரம் கழிவறைகள் மற்றும் வுழு செய்யும் இடங்களைத் திறத்தல்.
  • தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாத மற்றும் 12 வயதை விட குறைவானவர்களுக்கு அனுமதியில்லை

அத்துடன் கொரோனா தொடர்பான சுகாதார அமைச்சின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அனைவரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்,

  1. இதிராஷ் செயலியில் ஆரோக்கிய குறியீடான பச்சை நிறத்தைக் கொண்டிருத்தல்
  2. தொழுகைக்கான விரிப்புக்களை கொண்டுவருதல்
  3. முகக் கவசம் அணிந்திருத்தல் போன்றவை கட்டாயமாகும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிக குளிர் மற்றும் அதிக வெப்பநிலை கொண்டிருப்பவர்கள் மசூதிகளுக்கு பிரார்த்தனைக்காக வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு இஸ்லாமிய விவகாரங்களுப்புப் பொறுப்பாக உள்ள அமைச்சு (அவ்காப்) பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply