2021ம் ஆண்டில் 30 ஆயிரம் இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக கத்தாருக்கு பயணம்!

2021ம் ஆண்டில் 30 ஆயிரம் இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக கத்தாருக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலிருந்து சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் தொழில் நிமித்தல் வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

அதில் 30 ஆயிரம் பேர் கத்தாருக்கும், 27 ஆயிரம் பேர் சவுதி அரேபியாவுக்கும், 20 ஆயிரம் பேர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் பயணித்துள்ளனர்.

மேலும், 1600 பேர் சைப்ரஸ் நாட்டுக்கும், 1400 பேர் தென்கொரியாவுக்கும் வேலைவாய்ப்பிற்காக பயணித்துள்ளனர். என்றாலும், கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக பயணிப்பவர்களின் எண்ணிக்கை 2020ம் ஆண்டுடன் ஓப்பிடும் போது 73 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இலங்கைக்கு விடுமுறை சென்று மீள கத்தார் திரும்புவர்களுக்கு தனிமைப்படுத்தல் கிடையாது – ஜன 01 முதல் புதிய நடைமுறை!

Leave a Reply