கத்தாரில் உணவுப்பொருட்களின் உற்பத்தி நாடுகள் மாற்றி விற்பனை செய்த நிறுவனமொன்று சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து கத்தாருக்கு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று உணவுப் பொருட்களின் நாடுகளை மாற்றி (Country Made) விற்பனை செய்துள்ளதுடன், பல்வேறு வணிகம் ரீதியான விதிகளை மீறியுள்ளதாக கத்தார் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
கத்தார் வர்த்தக அமைச்சிற்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேற்படி நிறுவனம் சிக்கியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து கத்தாருக்கு காய்கறிகள், பழங்கள், மற்றும் இறைச்சி போன்றவற்றை இறக்குமதி செய்து வரும் முன்னனி நிறுவனமான, இது இலாப நோக்கத்தைக் கொண்டு உணவுப் பொருட்களின் உற்பத்தி நாடுகளின் பெயர்களை மாற்றி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.
அத்துடன், காலாவதியான பொருட்கள், மற்றும் பாவனைக்கு கூடாத பழங்களையும் மேற்படி நிறுவனம் விற்பனை செய்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கத்தார் வர்த்த அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு 35 சதவீதம் வரை தள்ளுபடியை அறிவித்தது கத்தார் ஏர்வெய்ஸ்