கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு 35 சதவீதம் வரை தள்ளுபடியை அறிவித்தது கத்தார் ஏர்வெய்ஸ்

2021 Qatar National day Promotion by Qatar Airways

எதிர்வரும்  18ம் திகதி கத்தார் தேசிய தினம் கொண்டாப்படவுள்ள நிலையில், தேசிய தினத்தை முன்னிட்டு விமான டிக்கட்களுக்கு 35 சதவீதம் வரை தள்ளுபடியை கத்தார் ஏர்வெய்ஸ் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு சலுகையை பெற விரும்புவர்கள், டிசம்பர் 12ம் திகதிக்கும் 18ம் திகதிக்கும் இடையில், விமான டிக்கட்டுக்களை புக்கிங் செய்து, 2021ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதிக்கும், 2022ம் ஆண்டு ஜுன் 15ம் திகதிக்கும் இடையில் தங்களது பயணங்களை அமைத்துக் கொள்ள முடியும். மேலும் இந்த சலுகையானது 140 நரங்களுக்கான விமானப் பயனங்களுக்கு செல்லுபடியாகும்.

மேலும் கத்தார் ஏர்வெய்ஸின் Privilege Clubயில் அங்கத்துவராக இருந்தால், இரட்டிப்பான Qmiles களைப் பெற்றுக்கொள்ள முடியும். மேற்படி தள்ளுபடி விலையில் விமான டிக்கட்டுக்களைப் புக்கிங் செய்ய விரும்புபவர்கள், tarairways.com/QND.  என்ற இணைப்புக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தார் தேசிய தின நிகழ்வுகள் ஆரம்பம்!

Leave a Reply