2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ண கால்ப்பந்துப் போட்டிகளை உத்தியோக பூர்வமாக நேற்றைய தினம் (30.11.2021) கத்தார் அதிபர் தமீம் பின் ஹமத் அவர்கள் அல் பைத் மைதானத்தில் ஆரம்பித்து வைத்தார்.
இறைவனின் பெயரால், மேலும் இறைவனின் ஆசிர் வாதத்தினாலும், இந்த பீபா அரபு கிண்ணத்தை ஆரம்பம் செய்கின்றோம் என்று கத்தார் அதிபர் அங்குரார்ப்பணம் செய்ததுடன், போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றும் 16 அணிகளுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், அரபுல நாடுகளிலுள்ள அனைவரும் போட்டி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க டோஹா நகருக்கும் வருகை தருமாறு அழைப்பும் விடுத்தார்.
மேற்படி ஆரம்ப நிகழ்வில், கத்தார் அதிபரின் தந்தை ஹமத் பின் கலீபா அல்தானி அவர்கள், தாயார் Sheikha HH Moza bint Nasser அவர்களும், கத்தாரின் ஏனைய முக்கிய அரசியல் பிரமுகர்களுடம் கலந்து கொண்டனர்.
லெபனான் அதிபர், HE Michel Aoun அவர்களும், பாலஸ்தீனத்தின் அதிபர் HE Mahmoud Abbas அவர்களும், சோமாலியா அதிபர் HE Mohamed Abdullah Farmajo அவர்களும், கலந்து சிறப்பித்திருந்தனர்.
இவர்களுடன் பீபாவின் தலைவர் கியன்னி இன்பான்டினோவும், GCC கூட்டமைப்பின் செயலாளர், HE Dr. Nayef Falah Mubarak Al Hajraf அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
உத்தியோக பூர்வ அங்குரார்ப்பணத்தின் பின்னர், கத்தார் மற்றும், பஹ்ரைன் நாடுகளுக்கிடையிலான கால்ப்பந்து போட்டி நடைபெற்றது. அதில் கத்தார் 1-0 என்ற கோல் அடிப்படையில் பெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கத்தாரில் டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை விபரங்கள் வெளியானது!