வெளிநாடுகளிலிருந்து கத்தார் திரும்புவதற்கான விதிமுறைகளில் மாற்றம்!

Qatar updates travel policy

வெளிநாடுகளிலிருந்து கத்தாருக்கு திரும்புவதற்கான விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் COVID-19யின் புதிய திரிவு தென் ஆபிரிக்காவிலிருந்து  பரவ ஆரம்பித்துள்ள நிலையில் கத்தாரும், கத்தார் திரும்புவதற்கான விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய நடைமுறைகள் விரைவாக நடைமுறைக்கு வரும் என்பதாக கத்தார் சுகாதார அமைச்சு தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்தின் மூலம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தாக்கம் அடிப்படையில், பச்சைப் பட்டியல் நாடுகள், மஞ்சல் பட்டியல் நாடுகள், சிவப்பு பட்டியல் நாடுகள் ஆகியவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிவப்பு பட்டியலில் இருந்து விதிவிலக்கான நாடுகளின் எண்ணிக்கையை 15 ஆக அதிகரித்துள்ளது.

 1. Bangladesh,
 2. Botswana,
 3. Egypt,
 4. Eswatini,
 5. India,
 6. Lesotho,
 7. Namibia,
 8. Nepal,
 9. Pakistan,
 10. Philippines,
 11. Sri Lanka,
 12. South Africa,
 13. South Sudan,
 14. Sudan,
 15. Zimbabwe.

ஒவ்வொரு பட்டியல் நாடுகளிலிருந்து பயணிக்க வெவ்வேறான தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (மேலதிக தகவல்கள் விரைவில்)

இதையும் படிங்க: கத்தார் ஹமத் வைத்தியசாலை இரத்ததானம் செய்யும் படி அனைவருக்கும் அழைப்பு!

Leave a Reply