தென் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கத்தார் ஏர்வெய்ஸ் விமானச் சேவையில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதாக கத்தார் ஏர்வெய்ஸ் நிருவாகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையானது உடனடியாக அமூலுக்கு வருவதுடன், தினந்தோறும் இது தொடர்பான கண்காணிப்புக்கள் இடம்பெறும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) யின் புதிய திரிபான Omicron (B.1.1.529) கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பயணத்தடை தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி புதிய திரிபு மிகவும் வேகமாக தென் ஆபிரிக்கா நாடுகளில் பரவி வருவதோடு, ஏனைய உலக நாடுகளுக்கு பரவும், சாத்தியம் அதிகம் காணப்படுவதாகவும் உலக சுகாதாரம் ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
முதற்கட்டமாக கடந்த நவம்பர் 26ம் திகதி, தென்ஆபிரிக்கா, ஸிம்பாப்பே போன்ற போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கத்தார் ஏர்வெய்ஸ் தடைவிதித்திருந்தது. இன்றைய தினம் (நவம்பர் 27) மற்றொரு தென் ஆபிரிக்கா நாடான மொஸாம்பிக்கிருந்து பயணிப்பவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கத்தார் ஏர்வெய்ஸ் தனது டுவிட்டர் ஊடாக அறிவிப்பு விடுத்துள்ளது.
என்றாலும், வெளிநாடுகளிலிருந்து தென் ஆபிரிக்கா, ஸிம்பாப்வே மற்றும் மொஸாம்பிக் நாடுகளுக்கு பயணிகள் தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளுடன் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பதாக கத்தார் ஏர்வெய்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வெளிநாடுகளிலிருந்து கத்தார் திரும்புவதற்கான விதிமுறைகளில் மாற்றம்!