வருமான வரி மற்றும், வட் வரி தொடர்பாக கத்தார் அரசு புதிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. கத்தாரின் பொது வரி ஆணைக்குழு வருமான வரி விதித்தல், மற்று் வட் வரி விதித்தல் தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் இல்லை என்பதாக தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் Ahmed bin Issa Al Mohannadi கத்தாரின் நாளிதளான அல் ஷார்க் பத்திரிகை்கு வழங்கியே செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். சட்டத்தின் பார்வையில் நாட்டுக்கு வருவாயை ஈட்டித்தரும் வழிகளில் வரிகள் இன்றியமையாததாகும்.
என்றாலும், கத்தார் அனைத்து துறைகளிலும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் குறைந்த வரி, மற்றும் கத்தார் வரி விலக்குகளை நடைமுறைகளைப் பின்பற்றுக்கின்றது. என்றாலும் எதிர்காலத்தில் பொருளாதார உறுதித்தன்மையை கருத்திற்கொண்டு வரி விதிப்பு தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்படும்.
உலக நாடுகளில் குறைந்த வரிவிதிப்புள்ள நாடுகளில் கத்தாரும் ஒன்றாகும். முதலீடுகளை ஆர்வப்படுத்தும் நோக்கில் கத்தார் குறைந்த வரிக் கொள்கையை கடைபிடித்து வருகின்றது. மேலும் கத்தார் வரி ஆணைக்குழுவானது 2018ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
கத்தார் மக்களிடையே வரிதொடர்பான விளிப்புணர்வை படிப்படியாக ஏற்படுத்தி வருகின்றது. 2018ம் ஆண்டின் 24ம் சட்டப் பிரிவுகள் வரி தொடர்பாக விளக்குவதாகவும் ஆணைக்குழுத்தலைவர் தெரிவித்தார்.
கத்தாரில் தற்போது கலால் பொருட்களுக்கு 50 சதவீத வரியும், ஊக்கப்பாணங்களுக்கும், புகையிலைப் பொருட்களுக்கும் 100 சதவீத வரியும் விதிக்கப்டுவதாக அவர்கள் தெளிவு படுத்தினார்.
என்றாலும் வருமான வரி மற்றும் வட் வரி அதிகரிப்ப தொடர்பான எந்த விதமான தீர்மானங்களுக்கு தற்போது இல்லை என்பதாக கத்தாரின் பொது வரி ஆணைக்குழுத்தலைவர் Ahmed bin Issa Al Mohannadi அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கத்தாரில் சாரதிகளாக பணிபுரிவோர் கவனத்திற்கு! உள்துறை அமைச்சு விடுக்கும் செய்தி!