கத்தார் ஹமத் வைத்தியசாலை, ஆரோக்கியமான கத்தார் வாழ் அனைவரும் இரத்த தானம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளது.
இரத்ததானம் செய்வது சீரான முறையில் இரத்த விநியோகத்தை கொண்டு செல்ல உதவும் என்பதாக HMC தெரிவித்துள்ளது. O-, O+, A-, B- மற்றும் AB- ஆகிய இரத்த வகைகள் அவசரமாக தேவைப்படுவதனால் முடியுமானவர்கள் விரைந்து இரத்த தானங்களை செய்து பிறர் உயிர் காக்க உதவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் விழாயக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 9.0 வரை ஹமத் வைத்தியசாலையின் கிளைகளை நாடமுடியும். மேலும், சனிக்கிழமையாயின் காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 2 வரையும் இரத்தங்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இரத்தம் வழக்க விரும்பமுள்ளவர்கள் 17 வயதை விட அதிகமாக இருத்தல் அவசியம் என்பதோடு, தொடர்ந்தேர்ச்சியான நோய்கள் அற்றவர்களாகவும், 50 கிலோ எடையை விட அதிகமாகவும், இருத்தல் கட்டாயம் என்பதாக ஹமத் வைத்தியசாலை நிருவாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கத்தாரில் நடைபெறவுள்ள பீபா கால்ப்பந்து அரபுக் கிண்ணம் 2021 – ஒரு பார்வை!