Qatar NewsQatar Tamil News

கத்தாரின் தற்போதைய மொத்த சனத்தொகை எவ்வளவு தெரியுமா?

கத்தாரின் மொத்த சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது கத்தாரின் சனத்தொகை 2,380,011 னாக (2.38மில்) கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 1,756,026 ஆண்களும்,  623,985 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந்த தரவுகளை கத்தார் புள்ளி விபரத்திணைக்களத்தின் தரவுகளை மேற்காட்டி கல்ப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2020ம் வருடத்தின் ஜுலை மாதத்தில் சனத்தொகையானது 2.75 மில்லியனாக காணப்பட்டதாகவும், அத்துடன் கடந்த வருடம் ஜுன் மாதம் சனத்தொகையானது 2.5மில்லியானக காணப்பட்டதாகவும், 2021ம் ஆண்டு ஜுலை மற்றும் ஜுன் மாதங்களுடன் ஒப்பிடும் போது முறையே ஜுலையில் 13.43%மும், ஜுனில் 4.9%மும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபரத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுவரை ஒப்பிடும் போது கத்தாரில் பதிவான குறைந்த சனத்தொகை பதிவு இதுவாகும் எனவும், முழுமையான தகவல்களை கத்தார் திட்டமிடல் மற்றும் புள்ளிவிபரத் அதிகார சபையின் இணைய தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகளவிலான கத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் விடுமுறைக்காக சென்றமை மற்றும் கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பிரயாணத் தடைகளினால் வெளிநாட்டவர்கள் கத்தாருக்கு வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் போன்றவற்றினால் கத்தார் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கத்தாரில் செம்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் சற்று தளர்வு!

Related Articles

Leave a Reply

Back to top button
%d