இன்றைய (01.09.2021) ஒரு கத்தார் றியால், இலங்கைப் பெறுமதியில் 62.00 ரூபாய்களாக பதிவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி ஒரு றியால் 55 ரூபாய்களாக காணப்பட்ட அதேவேளை 15 நாட்களில் 7 ரூபாய்கள் அதிகரித்து 62 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாம் இங்கு அல்-ஹபீப் பணப்பரிமாற்ற நிலையத்தின் பெறுமதியை மட்டுமே வழங்கியுள்ளோம். பணப்பரிமாற்ற நிலையங்களுக்கேற்ப பெறுமதிகள் கூடிக் குறைய வாய்புண்டு என்பதைக் கருத்திற் கொள்ளுங்கள்.
மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கைப் பெறுமதி வரலாற்றில் இல்லா வகையில் 204 ரூபாய்களாக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கத்தாரில் ON ARRIVAL VISA நாடுகளின் பட்டியல் 83 ஆக அதிகரிப்பு!