கத்தாரில்  தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரர் மாரடைப்பால் மரணம்

கடந்த 27.07.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று கத்தாரில் வெல் கார்கோ சர்வீஸஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நாகப்பட்டினம் மாவட்டம், தோப்புத்துறையை சேர்ந்த ஜனாப். ரகுமான்கான் த/பெ. மீரா ஹுசைன் அவர்கள் மாரடைப்பு (Heart attack) ஏற்பட்டு மரணித்துவிட்டார்.

மறைந்த சகோதரர் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முத்துப்பேட்டையை சார்ந்த பாசித், சீமான் அவர்கள் ஒருங்கிணைந்த தமிழர் பேரவையிடம் மறைந்த சகோதரரின் உடலை கத்தாரில் அடக்கம் செய்யும்படி கேட்டுகொண்டனர். அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நிர்வாகிகள் தலைவர் திரு. சமீர் அகமது, துணை செயலாளர்கள் திரு. இஷாக், திரு. ஃகதிர் அகமது, திரு.விஜயக்குமார், பொருளாளர் திரு. சிவராமன், செயலாளர் வலியுல்லாஹ், துணை தலைவர் திரு. இப்ராஹிம் ஆகியோர் மறைந்த சகோதரரின் உடலை உடனடியாக அடக்கம் செய்வதற்கு வேண்டிய அனைத்து பணிகளையும் மேற்கொண்டு,

நேற்று மாலை (01.08.2021) இஷா தொழுகைக்கு (8.15) பிறகு மிசைமர் (Mesaimeer Cementry) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இப்படிக்கு
#ஒருங்கிணைந்த_தமிழர்_பேரவை
#கத்தார்

Leave a Reply