கத்தாரில் வெளிநாட்டு தொழிலாளர்களின் தகுதிகாண் காலம் 9 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு வெளிநாட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி வழங்கும் நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி 2005ம் ஆண்டின் 8ம் இலக்க சட்டம் 2021ம் ஆண்டின் 21 இலக்க சட்டத்தின் மூலமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய திருத்தத்தின் படி வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தகுதிகாண் காலம் 3 மாதங்களுக்கு மேலதிகமாக 6 மாதங்கள், மொத்தமாக 9 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதியை அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ள பணியாளர்கள் தொடர்பான கையொப்பமிடப்படட தகவல்கள் அடங்கிய ஒப்பந்த நகல் தொழில் வழங்குநரால் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பணியாளர்கள் தங்களது நாடுகளிலேயே வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை தொழில் வழங்குநர் செய்ய வேண்டும். அத்துடன் பணியாளர்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவு போன்றவை தொழில் வழங்குநரால் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும் என்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பணியாளர் கத்தார் திரும்பிய பின்னர் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிக்கு அமர்ப்பத்தப்படாவிட்டால், உரிய அனுமதி இரத்துச் செய்யப்படும் என்பதாக நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகின் சிறந்த விமானங்களின் பட்டியல் வெளியீடு.. முதலிடத்தை பிடித்த கத்தார் ஏர்வேஸ்!