கோவிட் கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, கத்தார் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கத்தார் அரசின் தகவல் தொடர்புத் துறை புதிய டிஜிட்டல் வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கத்தாருக்கு பயணம் செல்பவர்களுக்கு ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டி www.gco.gov.qa/en/travel என்ற இணைய தளத்திற்குச் சென்று அங்கு கேட்கப் பட்டுள்ள ஆறு கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதுமானது.
ஆறு வினாக்களும் இவைகள் தான்
- Qatar ID Holder or No
- கோவிட் நிலை?
- 11 வயதுக்கு குறைந்த பிள்ளைகள் உடன் பயணிக்கின்றார்களா?
- 12-17 இடைப்பட்ட குழந்தைகள் உங்களுடன் பயணிக்கின்றார்களா?
- எந்த நாட்டிலிருந்து பயணிக்கின்றீர்கள்?
- கடந்த 10 நாட்களில் பயணித்த நாடு தொடர்பான விபரம்
இப்பக்கத்தில் ஒரு பயணி தரும் தகவல்களின் அடிப்படையில், அவரது பயணம் தொடர்பான விதிமுறைகள், தனிமைப் படுத்தல்கள், இன்ன பிற தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க : கொரோனா தடுப்பூசி பெற்று இலங்கையிலிருந்து கத்தாருக்கு பயணிக்க இருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்