கோடை கால பணி நேரக்கட்டுப்பாடுகளை மீறிய 232 வேலைத்தளங்களை ஜுனில் மூடிய கத்தார் அரசு!

232 work sites closed in June by Qatar Government

232 work sites closed in June by Qatar Government | கத்தாரில் தற்போது கடுமையான வெயிலுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. அதனால் பொது வெளியில் பணிபுரிபவர்களுக்கான பணி நேரக்கட்டுப்பாடுகள் கடந்த ஜுன் 01ம் திகதி முதல் அமலுக்கு வந்தன.

அதன் படி திறந்த வெளியில் நன்பகல் 10.00 முதல் மதியம் 3.30 வரை பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதத்தில் இந்த விதிகளைப் பின்பற்றாத 232 நிறுவனங்களின் வேலைத்தளங்களை நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு 3 நாட்களுக்கு மூடியுள்ளது.

அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்ட கள விஜயத்தின் போது கண்டு பிடிக்கப்பட்ட நிறுவனங்களின் பணியிடங்களே இவ்வாறு இலுத்து மூடப்பட்டுள்ளன.

பணியாளர்களின் நலன் கருதி தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்தின் நடைமுறைகளைப் பின்பற்றி நடக்கும் படி நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் இது போன்ற விதி மீறல்களில் நிறுவனங்கள் ஈடுபட்டால் 40280660 இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யும் படி அமைச்சு பணியாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜுன் 1ம் திகதி முதல் கோடைகால பணி நேரச் சட்டம் அமூல்
232 work sites closed in June by Qatar Government

Leave a Reply