இலங்கைக்கு ஓக்சிஜன் சிலின்டர்களை அன்பளிப்பு செய்தது கத்தாரிலுள்ள LULU குழுமம்

LuLu Hypermarket donates oxygen cylinders to Sri Lanka

Thanks to Lulu | இலங்கைக்கு குறிப்பிட்ட ஒரு தொகை ஓக்சிஜன் சிலின்டர்களை LULU குழுமம் அன்பளிப்பு  செய்துள்ளதாக கத்தாரின் நாளாந்த செய்தி நாளிதழான கல்ப் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கத்தாருக்கான இலங்கைத்தூதுவர் முஹம்மது மபாஸ் மொஹிதீன் அவர்களிடம்  LULU குழுமம் கத்தாருக்கான பிராந்திய பணிப்பாளர் Shaijan M O அவர்களினால் இந்த சிலின்டர்களை கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவ உபகரணங்களின் தேவையை ஈடுசெய்யும் வகையில் LULU குழுமம் சமூக பணிகளின் ஒரு அங்கமாக இந்த உதவிப் பொருட்கள் இலங்கைத் தூவரிடன் கையளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கத்தார் உட்பட அரபு நாடுகளில் அதிகளவுவானவர்களால் ஈர்க்கப்பட்டுள்ள சூபர் மார்க்கட்டுக்களில் ஒன்றாக LULU குழுமம் திகழ்கிறது. LULU குழுமத்தின் மனிதபிமான உதவிக்கு இலங்கையர் சார்பில் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். (Thanks to Lulu)

இதையும் படிங்க: கத்தாரில் 50 பாகையை நெருங்கும் வெப்பநிலை! பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கோரிக்கை

Leave a Reply