கத்தாரில் இன்று( மே-28) முதல் தளர்த்தப்பட்டுள்ள 32 வகையான கொரோனா கட்டுப்பாடுகள்!

Corona restrictions

கத்தாரில் கொரோனாவின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக கடைபிடிக்கப்பட்டு வந்த கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தளர்வுகளை ஏற்படுத்த கத்தார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கலந்துரையாடலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று முதல் (மே-28) மறு அறிவித்தல் வரை தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்பதாக கத்தார் அறிவித்துள்ளது.

 1. கத்தார் அரச துறைப்பணியாளர்களில் 50 சத வீதத்தினர் மாத்திரம் அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள். ஏயைவர்கள் தங்களது இருப்பிடங்களில் இருந்து பணி புரிவர். இந்த நடைமுறையிலிருந்து இராணுவ வீரர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் விலக்களிக்கப்படுகின்றனர்.
 2. கத்தார் தனியார்த் துறைப்பணியாளர்களில் 50 சத வீதத்தினர் மாத்திரம் அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள். ஏயைவர்கள் தங்களது இருப்பிடங்களில் இருந்து பணி புரிவர்.
 3. அரச, தனியார்த்துறைகளில் நடைபெறும் கூட்டங்களுக்கு முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட அதிகபட்சமாக 15 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர். ஏனையவர்கள் நவீன தொழில்நுட்பம் மூலம் வசிப்பிடங்களிலிருந்தே கூட்டங்களில் பங்குகொள்வார்கள்.
 4. வீட்டை விட்டு வெளியேறும் போது அனைவரும் முகக் கவசம் அணிந்திருப்பது கட்டாயமாகும். தனியாக வாகனம் செலுத்துபவர், மற்றும் குடும்பத்துடன் வாகனத்தில் பயணிப்பவருக்கு இது பொருந்தாது.
 5. கத்தாரிலுள்ள அனைவரும் வீட்டை விட்டு வெளியேறும் போது தங்களது கைப்பேசிகளில் EHTERAZ  செயலியை நிறுவியிருப்பது கட்டாயமாகும்.
 6. பள்ளிவாசல்கள் ஐங்காலத்தொழுகைக்காகவும், வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்காகவும் திறக்கப்படும். 12 வயதை விட குறைவானவர்களுக்கு அனுமதியில்லை. அத்துடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றியிருத்தல் கட்டாயமாகும். மலசல கூடங்கள், வுழு செய்யும் இடங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
 7. முழுமையான தடுப்பூசி பெற்ற 5 பேர் வீட்டிலும், அதிகபட்சம் 10 போ் மஜ்லிஸ்ஸிலும் ஓன்று கூட அனுமதி. தடுப்பூசியின் இரண்டு டோஸ்(doses )களை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு அனுமதியில்லை.
 8. வீட்டிலும், மற்றும் வெளியிடங்களிலும் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை.
 9.  பூங்காக்கள், கடற்கரைகள் 30 சதவீதம் அளவில் திறக்கப்பட்டிருக்கும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வரை  அனுமதிக்கப்படுவர். விளையாட்டுக்கான பகுதிகள் மூடப்பட்டிருந்தாலும், நடைப்பயிற்சி, சைக்கிலோட்டம் போன்றவற்றுக்கு அனுமதி.
 10. வாகனங்களில் 4 பேர் மாத்திரம் செல்ல அனுமதி. ஒரே குடும்ப உறுப்பினர்களுக்கு இது பொருந்தாது.
 11.  பொதுப்போக்குவரக்கு பஸ்களில் ஏற்றப்படும் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதமாக இருக்கும்.
 12. மெட்ரோ சேவைகள் இயங்கும். இயங்கு திறன் 30 சதவீதமாக காணப்படும்.
 13.  வாகன ஓட்டுநர் அனுமதிப் பாடசாலைகளில் 30 சதவீதமளவு திறக்கப்படும். அங்குள்ள பணியாளர்கள் அனைவரும் முழுமையாக கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருத்தல் வேண்டும்.
 14. தியேட்டர்கள், சினிமா கொட்டகைகள் 30 சதவீதமளவு திறக்கப்படும். தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவதோடு 12 வயதை விட குறைவானவர்களுக்கு அனுமதியில்லை.
 15. தனியார் கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிலையங்கள் 30 சதவீதமளவு திறக்கப்படும். அங்குள்ள பயிற்சி வழங்குபவர்கள் அனைவரும் முழுமையாக கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருத்தல் வேண்டும்.
 16.  நாற்றுமேடைகள் 30 சதவீதமளவு திறக்கப்படும்.  அங்குள்ள பணியாளர்கள் அனைவரும் முழுமையாக கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருத்தல் வேண்டும்.
 17. அருங்காட்சியகம், பொதுநூலகம் போன்றவை 30 சதவீதமளவு திறக்கப்படும்.
 18. விசேட தேவையுடையவர்களுக்கான கல்விப் போதனைகள் 5 பேரை விட அதிகாிக்காமல் இருக்க வேண்டும் என்பதோடு பணியாளர்கள் அனைவரும் முழுமையாக கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருத்தல் வேண்டும்.
 19. தொழில்சார் விளையாட்டுப்பயிற்சிகளின் போது திறந்த வெளியில் அதிகபட்சம் 10 பேரும், மூடிய பகுதியில் 5 பேரும் அனுமதிக்கப்படுவார்கள். அனைவரும் முழுமையாக கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருத்தல் வேண்டும்.
 20. உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகள் சுகாதார அமைச்சின் அனுமதி பெற்று 30 சதவீதமாக திறக்கப்படும்.  பங்குபற்றுபவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும்.
 21. அனைத்து மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை.
 22. பல்பொருள் அங்காடிகள் 30 சதவீதம் வரை மாத்திரம் திறக்கப்படும். 12 வயதிக்குட்பட்டவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
 23. உணவகங்கள், கோபி சொப்கள் பின்வரும் அடிப்படையில் சேவைகளைத் தொடரும்.
  1. திறந்த வெளியில் உள்ள அனைத்து உணவகங்கள் 30 சதவீதமாக மாத்திரம் திறக்கப்படும்
  2.  முடிய நிலையிலுள்ள உணவகங்கள் Clean Qatar சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பணியாளர்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசிகளையும் (both doses )பெற்றிருத்தல் கட்டாயமாகும்.
 24.  வாடகைப் படகுச் சவாரிகளுக்கு அனுமதியில்லை. என்றாலும், விதிவிலக்காக குடும்பங்களுக்கு வழங்கப்படலாம்.
 25. சூக் வாகிப் 30 சத வீதமாக மாத்திரம் திறக்கப்படும். 12 வயதிற்குட்பட்டவர்களுக்கு அனுமதியில்லை
 26. மொத்த சந்தை  (wholesale markets) 30 சத வீதமாக மாத்திரம் திறக்கப்படும். 12 வயதிற்குட்பட்டவர்களுக்கு அனுமதியில்லை
 27.  அழகு சிகிச்சை நிலையங்கள், சலூன்கள் 30 சதவீத அளவில் மாத்திரம் திறக்கப்படும். ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருத்தல் அவசியம்.
 28. பொழுது போக்கு பூங்காக்கள், கேளிக்கைப் பூங்காக்கள் 30 சதவீதமாக திறக்கப்படும், பூங்காக்களின் உள்ளக பகுதிகளில் 20 சதவீதம் திறக்கப்படுவதோடு, தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள்.
 29. ஆரோக்கிய கிளம், ஸ்பாக்ககள் போன்றவை 30 சதவீதமாக மாத்திரம் திறக்கப்படுவதோடு, ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருத்தல் வேண்டும்
 30.  நீச்சல் தடாகளங்கள் திறந்த வெளியில் 30 சதவீத அளவிலும், மூடிய பகுதியில் 20 சதவீத அளவிலும் திறக்கப்படும். அதனது ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருத்தல் வேண்டும்
 31. தனியார் மருத்துவ சேவை மையங்கள் 80 சதவீதமளவில் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.
 32. துப்புரவு மற்றும் விருந்தோம்பல் நிறுவனங்கள் முழுமையான இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு கொண்டு 30 சதவீதம் அளவில் திறக்க அனுமதிக்கப்படுவதாக அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்த நடைமுறைகள் அனைத்தும் இன்று (மே-28) முதல் மறு அறிவித்தல் வரை பின்பற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply