கத்தாரில் பாடசாலை மாணவர்களது வருகையை முழுமையான நிறுத்த தீர்மானம்!

கத்தாரில் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பாடசாலையின் நடைமுறையில் மாற்றம் கொண்டுவர தீர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் கத்தாரிலுள்ள அரச, தனியார் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள், முன்பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் மாணவர்களை வருகையை நிறுத்தி கற்கை நடவடிக்கைகளை தொலைதூரக் கல்வி (Distance Learning) மூலம் நடத்த கல்வி மற்றும் உயர்கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த முடிவானது, பொது நலனில் அக்கறை கொண்டு கத்தாரின் சுகாதார அமைச்சுடன் இணைந்து கல்வியமைச்சானது இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. பாடசாலைகளுக்கு மாணவர்கள் வராவிட்டாலும், ஆசிரியர்களும், ஏனைய ஊழியர்களும் சமூகம் தருவது கட்டாயமாகும்.

தேர்வுகள் குறித்த திகதிகளில் நடைபெறும் என்பதாகவும், பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல்கள் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படும் என்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூரக் கல்வி (Distance Learning)யானது கல்வி சார் செயற்பாடுகளின் ஒரு அங்கமாகும். மாணவர்கள் தொலைதூரக் கல்வியை  சிறந்த முறையில் தொடர்வதற்கான ஏற்பாடுகளை பெற்றோர்கள் ஏற்பாடு செய்து கொடுப்பதோடு, உரிய ஆசிரியர்ளுக்கு தங்களது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பின்பற்றப்பட்டு வந்து ஆன்லைன் முறைமைகள் சீர்செய்யப்பட்டு தற்போது சிறந்த முறையில் கல்வியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாடசாலைக்கு மாணவர்களை அழைக்காமைக்கு அவர்களது பாதுகாப்பு தான் முக்கிய காரணமாகும். தற்போது கத்தாரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் மாணவர்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்கவே இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாக கத்தார் உயர்கல்வி மற்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply