கத்தார் தப்னாவிலுள்ள பின்வரும் வீதி எதிர்வரும் 6 மாதங்களுக்கு மூடப்படுகிறது : Ashghal தெரிவிப்பு

கத்தாரின் தப்னா பகுதியிலுள்ள உமர் முக்தார் வீதி (Omar Al Mukhtar) மற்றும், பால்ஹம்பர் (Balhambar Street) வீதியுடனான சுற்றுவட்டம் போன்றவை எதிர்வரும் 6 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக கத்தார் பொதுப்பணி அதிகார சபை (Ashghal ) தெரிவித்துள்ளது. மேற்படி வீதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் காரணமாக இந்த வீதிகள் மூடப்படவுள்ளன. 

மேற்படி மூடப்படும் பகுதிகளில் தூதரங்கள் அமைந்திருப்பதனால், அங்கு சென்று வருவதற்கான ஏற்பாடுகள் பொதுப்பணி அதிகார சபை  மேற்கொள்ளப்படவுள்ளன. ஏப்ரல் 16 வெள்ளிக்கிழமை தொடங்கி 6 மாதங்களுக்கு மேற்படி வீதிகள் மூடப்பட்டிருக்கும். எனவே வாகன ஓட்டுநனர்கள் உரிய மாற்று வீதிகளைப் பாவிக்கும் படி பொதுப்பணி அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க : கத்தாரில் PCR பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்ட தனியார் வைத்தியசாலைகள் : புதிய பட்டியல்!

Leave a Reply