கத்தார் வாழ் உறவுகள் அனைவரும் இனிய ரமழான் வாழ்த்துக்கள் – கத்தார் அமீரின் ரமழான் வாழ்த்துச் செய்தி!

கத்தாரில் நாளை(13.04.2021)  ரமழான் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பை இஸ்லாமிய விவகார அமைச்சு இன்று இரவு வெளியிட்டுள்ளது.

கத்தார் அதிபர் தமீம் பின் ஹமத் பின் அல்தானி அவர்கள் தனது புனித ரமழான் மாத வாழ்த்துச் செய்திகளை தெரிவித்துள்ளார்கள். கத்தார் மற்றும் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் உள்ளவர்களுக்கு கத்தார் அதிபர் தனது ரமழான் மாத வாழ்த்துக்களை தெரிவித்துள்ளா்கள்.

மேலும், சவுதி மன்னர் சல்மான் அவர்களுக்கும், குவைத் மன்னர் நவாப் அஹமத் அவர்களுக்கும், ஜேர்தானின் மன்னர் அவர்களுக்கும், துருக்கி அதிபர் அவர்களுக்கு தனது பிரத்தியேக ரமழான் வாழ்த்துச் செய்திகளை  கத்தார் அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Also Read : கத்தாரின் பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகை நடைபெறாது – அவ்காப் அறிவிப்பு!

Leave a Reply