Qatar Tamil News

கத்தாரில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள ஆரோக்கிய அட்டை தேவையில்லை!

கத்தாரில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள ஆரோக்கிய அட்டை தேவையில்லை என்பதாக கத்தார் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கத்தாரில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள ஆரோக்கிய அட்டை (health card) தற்காலிகமாக தேவையில்லை என சுகாதார அமைச்சின் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பாக சுகாதார அமைச்சு தனது டுவிட்டர் பக்கத்தில் ” கத்தாரில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள இனி ஆரோக்கிய அட்டை தேவைப்படமாட்டாது. மேலும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வரும் போது, செல்லுபடியாகும், கத்தார் அடையாள அட்டை, மற்றும் இஹ்திராஸ் (Ehteraz) செயலியில் பச்சை நிறை அடையாளம் போன்றவை கட்டாயமாகும். மேலும், கத்தார்  ஆரம்ப அரசாங்க மருத்துவ  நிலையங்களில் சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொள்ள கத்தார் ஆரோக்கிய அட்டை கட்டாயமாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button
%d