கத்தார் பயணிக்கும் இலங்கையர்கள் உட்பட 6 ஆசிய நாட்டவர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிகள் ஏப்-29 முதல் அமூல்

கத்தார் பயணிக்கும் இலங்கையர்கள் உட்பட 6 ஆசிய நாட்டவர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிகள் ஏப்-29 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கத்தார் சுகாதார அமைச்சு இன்று (27.04.2021) அறிவித்துள்ளது. கத்தார் சுகாதார அமைச்சு இந்த அறிவித்தலை  தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் 29ம் திகதி கத்தார் நேரப்படி நள்ளிரவு 12.00 முதல் இந்த புதிய நடைமுறை அமூலுக்குவரவுள்ளது. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாட்டவர்களுக்கு இந்த புதிய தனிமைப்படுத்தல் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேற்படி நாட்டிலிருந்து நேரடி விமானச் சேவை மூலம் பயணித்தாலும், அல்லது டிரான்சிட் விமானம் மூலம் பயணித்தாலும், இந்த புதிய தனிமைப்படுத்தல் விதிக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாக கத்தார் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் வாசியுங்கள் : இலங்கைஉட்பட ஆசிய நாட்டவர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிகளை அறிந்து கொள்ள! 

Leave a Reply