கத்தாரில் இன்று (ஏப்-09) முதல் விதிக்கப்படும் 32 வகையான புதிய கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள்!

கத்தாரின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் பிரதமரும், கத்தாரின் உள்துறை அமைச்சருமான எச். ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல் தானி அவர்களின் தலைமையில் வீடியோ கான்பெரன்ஸ் முறையில் நடைபெற்றது.

கத்தாரில் கொரோனா தொற்று நாளாந்தம் அதிகரித்து வருவதனால் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இவ்வாறு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ம் திகதி முதல் நடைமுறைக் வரும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. அரச ஊழியர்கள் எண்ணிக்கை 50 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏனைய ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அல்லது தேவைகளின் போது மாத்திரம் அழைக்கப்படவேண்டும். இதிலிருந்து இராணுவ வீரர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் விதிவிலக்களிக்கப்பட்டுள்ளனர்.

2 . தனியார் துறை அலுவலக ஊழியர்கள் எண்ணிக்கை 50 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏனைய ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அல்லது தேவைகளின் போது மாத்திரம் அழைக்கப்படவேண்டும். விதிவிலக்களிக்கப்பட்டவர்கள் தொடர்பாக வர்த்தமாக அமைச்சு, உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்படும்.

3. அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கான கூட்டங்கள் ஆன்லைன் மூலம் நடைபெறும். தேவையான சந்தர்ப்பத்தில் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் 5 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள்.

 4. வீட்டிலிருந்தோ, பணி புரியும் இடத்திலிருந்து வெளியாகும் போது முகக் கவசம் அணிந்திருப்பது கட்டாயமாகும். குடும்பத்துடன், அல்லது காரில் தனியாக பயணிக்கும் போது இது பொருந்தாது.

5 – எந்தவொரு காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியேறும்போது ஸ்மார்ட்போன்களில் (EHTERAZ) செயலியை நிறுவி இருப்பது அவர் மீதும் கட்டாயமாகும்.

6. கொரோனா பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி பள்ளிவாசல்கள் ஐங்காலத் தொழுகைக்காகவும். ஜும்ஆத் தொழுகைக்காகவும் திறக்கப்படும். ரமழான் மாத தராவீஹ் தொழுகைகள் வீட்டிலேயே தொழப்படும். பள்ளிவாசல்களிலும். மலசலகூடங்கள் மற்றும் வுழு செய்யும் இடங்களில் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

7. வீடுகள், மஜ்லிஸ்கள் போன்ற இடங்களில் கூட்டங்கள் கூடுவது தடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ள 5 பேர் ஒன்று கூட முடியும்.

8. குளிர்கால முகாம்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள்.

9 . திருமண நிகழ்வுகள், கூடிய அல்லது திறந்து எந்த இடத்தில் நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

10. பொது பூங்காக்கள், கடற்கரைகள் மற்றும் கார்னிச் ஆகியவற்றில் கூட்டங்கள் நடாத்துவது அல்லது உட்கார்ந்து அனுமதிக்கப்படுவதில்லை. நடைபயிற்சி, ஜாகிங் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற தனிப்பட்ட விளையாட்டுக்கள் அனுமதிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் அந்த இடங்களில் விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களைப் பாவிப்பது தொடர்ந்து தடைசெய்யப்பட்டுள்ளது.

11. வாகனத்தில் ஓட்டுநருடன் சேர்த்து 4 நபர்கள் மாத்திரம் அனுமதிகப்படுவார்கள். வாகனித்தில் பயணிக்கும் ஒரே உறுப்பினர்கள் இதிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டுள்ளார்கள்.

12. பஸ்களில் பயணிப்பவர்களது எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. பயணங்களை மேற்கொள்ளும் போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிவடிக்கைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.

13. மெட்ரோக்களின் மூலம் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 20 வீதத்தால் குறைகப்பட்டுள்ளது. வெள்ளி, சனிக்கிழமையகளில் மெட்ரோ சேவைகள் நடைபெறாது. மேலும் தரிப்பிடங்களில் உள்ள புகைப்பிடிக்கும் பகுதிகள் மூடப்பட்டிருக்கும்.

14.  வாகன ஓட்டுநர் பயிற்சிப் பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

15. சினிமாத் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

16. தனியார் கல்வி மற்றும் பயிற்சி நிலையங்கள் தங்களது கற்கைகளை ஆன்லைன் வழியாக மாத்திரம் நடத்த வேண்டும்.

17. நர்சரிகள் தொடர்ந்து மூடப்படும்

18. அருங்காட்சியகங்கள், நூலகங்களில் மூடப்படும்

19. கத்தார் சுகாதார அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட உள்ளூர், சர்வதேச போட்டிகளுக்கான பயிற்சிகள் தவிர்ந்த ஏனைய பயிற்சிகள் அனைத்து நிறுத்தப்படும்.

20.  உள்ளூர் அல்லது சர்வதேசப் போட்டி நிகழ்ச்சிகளை ஏற்பாடுகள் செய்ய கத்தார் சுகாதார அமைச்சிடமிருந்த சிறப்பு அனுமதி பெறப்படல் வேண்டும்.

21. சர்வதேசப் போட்டி நிகழ்சிகளுக்கான அனைத்பு பயிற்சிகளும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன.

22. மாநாடு, கண்காட்சி, நிகழ்வுகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

23. மால்கள் 30 வீதம் அளவு மாத்திரம் திறக்கப்படவேண்டும். 16 வயதிற்கு குறைந்தவர்கள் அனுமதிக்கப்படக்கூடாது. மால்களில் உள்ள பிரார்த்தனை அறைகள், உடைமாற்றும் அறைகள் மூடப்பட வேண்டும். அத்துடன் இங்குள்ள உணவகங்களில் யாரும் அமந்து உண்ண அனுமதிக்கப்படமாட்டார்கள். உணவை வாங்கிச் செல்ல முடியும் அல்லது டிலிவரி மூலம் ஆர்டர்களைச் செய்ய முடியும்.

24. உணவகங்கள், கபேக்களில் யாரும் அமந்து உண்ண அனுமதிக்கப்படமாட்டார்கள். உணவை வாங்கிச் செல்ல முடியும் அல்லது டிலிவரி மூலம் ஆர்டர்களைச் செய்ய முடியும்.

25. படகுகளை வாடகைக்கு விடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், என்றாலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கொரோனா தடுப்பூசி பெற்றவர்களுக்கு வழங்க முடியும்.

26. பாரம்பரிய சந்தைகள் (Traditional Souqs) 30 வீத அளவில் மாத்திரம் திறக்க அனுமதிக்கப்படும். 16 வயதிற்கு குறைந்தவர்கள் நுழைய அனுமதியில்லை. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சந்தை மூடப்பட்டிருக்கும்.

27. மொத்த சந்தைகளின் ( wholesale markets) தொடர்ச்சியான செயல்பாடு 30% க்கு அதிகரிக்காமல் இருந்தல் வேண்டும் மேலும், 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

28. சலுன்கள், அழகுக் கலை நிலையங்கள் மூடப்படுமு்

29. பொழுது போக்குப் பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களும் மூடப்படும்.

30. ஆரோக்கிய கிளப்கள், உடற்பயிற்சி நிலையங்கள், saunas, steam rooms, Jacuzzi services, and Moroccan and Turkish baths. ஆகிய அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

31. கத்தாரிலுள்ள நீர்ப்பூங்கா மற்றும், நீச்சல் தடாகங்கள் அனைத்து மூடப்பட்டிருக்கும்.

32. தனியார் மருத்துவ நிலையங்களில் அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சேவைகள் நிறுத்தப்படும். என்றாலும் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டி சேவைகளை வழங்க முடியும்.

என்பதாக கத்தார் அமைச்சரவையின் வாராந்த கூட்டத்தில் தீர்மானமெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply