வெளிநாடுகளில் 2 தடுப்பூசிகளைப் பெற்று இலங்கை திரும்புவோருக்கு தனிமைப்படுத்தல் கிடையாது! PCR மட்டுமே.

“வெளிநாட்டில் இருந்து நாடு திரும்புவோர் கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொண்டவர்களாக இருந்தால் அவர்களை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் பிசிஆர் பரிசோதனை மட்டுமே மேற்கொள்ளப்படும் .

இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இவ்வாறு அறிவித்துள்ளார். (நன்றி -தமிழன்)

அத்துடன் தடுப்பூசி எதனையும் பெறாமல், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

புதிய கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டின் அறிகுறிகள் 7-10 நாட்களுக்குப் பின்னரே காணப்படுகின்றன என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .

ஆகையால் வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களை ஏழு நாட்களுக்குப் பிறகு வீடுகளுக்கு அனுப்ப முடியாது என்றும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதைக் கட்டாயமாக்கும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply