வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்ப விரும்புபவர்கள் தூதரகங்களில் பதிவு செய்யத் தேவையில்லை – இராணுவத் தளபதி

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று (06.04.02021) தெரிவித்துள்ளார்.

கோவிட் நோய்த் தொற்று பரவுகை காரணமாக வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் (தூதரகங்களில் பதிவுசெய்தல்) அனுமதி
பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் வசித்து வரும் இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டுமாயின் வெளிவிவகார அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத் தேவை காணப்பட்டது.

எனினும் இனி வரும் காலங்களில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் இவ்வாறு வெளிவிவகார அமைச்சின் அனுமதி பெற வேண்டியதில்லை என இராணுவத் தளபதி கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply