கத்தாருக்குள் கடத்தப்படவிருந்ந 1350 கிலோ போதைப்பொருட்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல்

1350 Kg Drugs

கத்தாருக்கு கடத்தப்படவிருந்ந 1350 கிலோ போதைப்பொருட்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் முதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு சமூக ஊடகமொன்றில் இடப்பட்ட பதிவு ஒன்றில் அடிப்படையில் இந்த பறிமுதல் நடைபெற்றுள்ளது. போதைப்பொருட்கள் கத்தாருக்கு இறக்குதி செய்யப்படவிருந்த கோதுமை வைக்கற்றுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த எடை 1,350 கிலோகிராம் ஆகும்.

சட்டவிரோதப் பொருட்களை கத்தாருக்கு கொண்டுவருபவர்களுக்கு கடும் எச்சரிக்கையை உள்துறை அமைச்சு விடுத்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாகவும்  அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply