கத்தாரில் ஜனாஸாத் தொழுகைக்கு சமூகமளிப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

மிக முக்கியமான வேண்டுகோள் – அன்பான சகோதரர்களே!
கொரோனா நோயிலிருந்து எம்மையும் எமது உறவுகளையும் பாதுகாத்துக்கொள்வது எமது கடமையாகும்.
அந்த வகையில் கத்தார் அபூஹமூர் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் போது சுகாதார முறைகளை பின்பற்றி நடப்பதில் அசிரத்தையாக இருப்பதை கடந்த ஜனாஸா நல்லடக்கங்களில் போது CDF Qatar குழுவினரால் கவனிக்க கூடியதாக இருந்தது. அதனாலேதான் CDF Qatar இந்த விழிப்புணர்வு பதிவை செய்து உங்களுக்கு நியாபகமூட்ட விரும்புகிறது.
எனவே, ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்பவர்கள் பின்வரும் விடயங்களை கட்டாயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளுமாறு அன்பாக வேண்டிக்கொள்கிறோம்!
✅ ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக்கவசத்தை (Face Mask) உரிய முறையில் அணிந்துகொள்ளுங்கள்.
✅ ஜனாஸா தொழுகைக்கு வருபவர்கள் இயலுமானால் ஜனாஸாவை பார்த்துவிட்டு கைகொடுத்து பேசிக்கொண்டு இருக்காமல் பள்ளியினுள் சென்று அமர்ந்து தொழுதுவிட்டு தனித்தனியாக (கூட்டாக அல்ல) மையவாடிக்கு நேரடியாக சொல்லுங்கள்.
✅ தொழுகைக்கான விரிப்புகளை கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும், இல்லையென்றால் பள்ளியில் தரப்படும் பொலித்தீன் விரிப்புக்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
✅ ஜனாஸாவை தொழுகைக்கு மற்றும் கப்ர்க்கு எடுத்துச் செல்லும் போது உறவினர்களுக்கு, நெருக்கமானவர்களுக்கு இடம் கொடுத்து ஏனையோர் ஒதுங்கி கொள்வது சிறந்தது.
✅ ஜனாஸா நல்லடக்கம் செய்யும் போது கப்ரை சுற்றி நெருக்கமாக, குழுமி இருக்காமல் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமானவர்களுக்கு அந்த வாய்ப்பை கொடுத்து தூரமாகி இருந்தல் நல்லது.
✅ தூரமாக இருப்பவர்களும் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு தனித்தனியாக நிற்கவேண்டும், கூட்டாக நிற்பதை முழுவதுமாக தவிர்த்தல் வேண்டும்.
✅ ஜனாஸா நல்லடக்கம் முடிந்த பிறகு கைகொடுப்பதை தவிர்த்து தனித்தனிய அவ்விடத்தில் இருந்து கலைந்து செல்லவேண்டும். குறிப்பாக கூடி நின்று பேசுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
✅ சனக்கூட்டம் நிறைந்த இடத்திற்கு சென்று வருவதனால் வீட்டுக்கு சென்றவுடன் எமது ஆடைகளை மாற்றி குளித்து சுத்தமாகி கொள்ளவது சிறந்தது.
அன்பான சகோதரர்களே!
நாம் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல், கத்தார் அரசாங்கம் எங்களுக்கு தந்திருக்கும் சந்தர்ப்பத்தை தவறாக பயன்படுத்தாமல், மேலே கூறப்பட்ட விடயங்களை பின்பற்றி இந்த கொரோனா நோயின் தாக்கத்திலிருந்து எம்மையும், எமது உறவுகளையும் பாதுகாக்க வேண்டும் என CDF Qatar உங்களிடம் அன்பாக கேட்டுக்கொள்கிறது.
குறிப்பு : சுகாதார நடைமுறைகளை மீறி நடந்தால் எதிர்வரும் காலங்களில் ஜனாஸா அடக்கம் செய்யும் போது நாம் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதையும் மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
🇱🇰CDF©️🇶🇦MEDIA

Leave a Reply