கத்தாரில் கொரோனா முன்னெச்சரிக்கை பின்பற்றத் தவறிய 263 பேர் இன்று கைது!

கத்தாரில் கொரோனா முன்னெச்சரிக்கையை பின்பற்றத் தவறிய 263 பேர் இன்று (21.04.2021) கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

வலியுறுத்தப்பட்ட இடங்களில் முகக் கவசம் அணியாத குற்றத்திக்காக 256 பேரும், வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக ஏற்றிய குற்றத்திற்காக ஒருவரும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத குற்றத்திற்காக 5 பேரும், தனிமைப்படுத்தல் விதியை மீறியமைக்காக ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கத்தாரில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில். கத்தார் பொது சுகாதார அமைச்சு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. மேற்படி அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply