Qatar Tamil News

கொரோனா பரவலைத் தடுக்க கத்தாரை முழுமையாக முடக்குங்கள் சுகாதார அதிகாரி கோரிக்கை!

கத்தாரில் நாளாந்த கொரோனா தொற்றுக்கள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்படுத்த வேண்டுமெனில் கத்தாரை முழுமையாக முடக்க வேண்டும் என்பதாக சுகாதார அதிகாரியொருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹமாத் மருத்துவக் கூட்டுத்தாபனத்தின் (HMC) தீவிர சிகிச்சை பிரிவுகளின் செயல் தலைவர் அகமது அல் முகமது தொலைக்காட்சிக்கு வழங்கிய நேற்றைய தினம் வழங்கிய செவ்வியொன்றில், முதல் அலையிலிருந்து கத்தார் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கையில் உச்சத்தை அடைந்து வருவதாகவும், இதில் 14  வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“பெப்ரவரி மாதம் தீவிர சிகிச்சை பிரிவுகளில் நோயாளர்கள் எண்ணிக்கை 53 ஆக இருந்தது. இப்போது எங்களுக்கு 300 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்” என்று அல்-முகமது கத்தார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்கள்.  கடந்த  வருடம் கத்தாரில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த வேளையில் கூட இந்தளவு நோயாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவில்லை. இன்றைய தினம் 720 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் மரணித்தவர்கள் எண்ணிக்கை 289 ஐ எட்டியுள்ளது.  இது வரை 1.7 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே கத்தாரில் கொரோனா பரவலை தடுக்க வேண்டுமெனில் கத்தாரரை முழுமையாக முடக்க வேண்டும் என்பதாக அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அல் ஜெஸீரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button
%d