கத்தாரில் வாகன இலக்க தகட்டுக்களுக்கு முகக்கவசம் அணிவித்த சாரதிகள் கைது !

Mask in Number Plate

கத்தாரில் வாகன இலக்க தகட்டுகளுக்கு முகக்கவசம் அணிவித்த சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன. வாகன இலகத்தகடுகளை மறைத்த குற்றத்திக்காக 16 பேரும், ஏனைய வாகனம் தொடர்பாக குற்றச்செயல்களுக்காக 45 வாகன சாரதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கத்தார் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

சீலைன் கடற்கறைப் பகுதியில் பிப்ரவரி 13 முதல் மார்ச் 13 வரை 16 நம்பர் பிளேட்டை மறைத்த குற்றத்தில் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களது வானங்களின் இலக்கத் தகடுகளை முகக்கவசங்களைக் கொண்ட மறைத்திருந்நதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கத்தாரில் வாகனத்தின் இலக்கத் தகட்டை மறைப்பதற்கான தண்டனையாக 3 நாட்கள் சிறையும் அத்துடன், நீதி மன்றத்தில் அவர்களுக்தெரிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்பதாக கத்தார் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply