கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு வசதிகளைப் பாதுகாப்பது தொடர்பான 2004 ஆம் ஆண்டின் 8 ஆம் எண் சட்டத்தை மீறினால் QR 500,000 மற்றும் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று Ras Laffan பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கடல் நடவடிக்கைகளின் உதவி இயக்குநர் கேப்டன் ஜாசிம் அப்துல்லா அல் தானி தெரிவித்துள்ளார்.
கத்தார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது கேப்டன் ஜாசிம் இதனைத் தெரிவித்துள்ளார் மேலும் இங்கு அவர் கருத்து தெரிவிக்கும் போது, 2004 ஆம் ஆண்டின் சட்ட எண். (8) இன் எண். 2, 3 மற்றும் 4, கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு வசதிகளைப் பாதுகாப்பது தொடர்பானதாகும். இதனை மீறுபவர்களுக்கு இது போன்ற பாரதூரமான தண்டனைகள் வழங்கப்படவுள்ள அவர் விளக்கியுள்ளார்.
கடல் எண்ணெய் மற்று எரிவாயு வசதிகளை பாதுக்காக்கும் சட்டத்தை மீறும் சந்தர்ப்பங்கள் வருமாறு.
- அனுமதியின் றி எண்ணெய் கடல் தங்களை 500 மீற்றருக்கும் கப்பல்கள் மூலம் அணுகுதல்
- கடல் தளங்களிலிருந்து 500 மீற்றருக்கும் குறைவான தூரத்தில் மீன்பிடித்தல்
- கடல்கடந்த எண்ணெய் தளங்களில் இருந்து 500 மீட்டருக்கும் குறைவான தொலைவில் வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ நாசவேலைகளை மேற்கொள்ளுதல்.
- எண்ணெய் மற்றும் எரிவாயு நடவடிக்கைகளுக்காக கடற்கரைப் பகுதியில் நங்கூரமிடுதல்.
எந்தவொரு நோக்கத்திற்காகவும் 500 மீட்டருக்கு கீழ் அணுகினால், மீறல் QR100,000 ஐ எட்டலாம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டு அபராதங்களில் ஒன்று.
தற்செயலாக நாசவேலைகளைச் செய்தால், மீறல் QR200,000 ஐ எட்டலாம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
வேண்டுமென்றே நாசவேலை செய்யும் செயல்கள், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் QR500,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.