கத்தாரிலிருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன.
கத்தார் முழுவதும் உள்ள பணப்பரிமாற்ற நிறுவனங்கள் (Exchange ) ர்வதேச பணப் பரிமாற்றங்களுக்கான கட்டணத்தை உயர்த்தி, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கூடுதல் QR5 அறவிடப்படும் என்பதாக அறிவித்துள்ளன.
இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான கட்டணம் முன்பு QR15 ஆக இருந்தது, தற்போது ஒரு பரிவர்த்தனைக்கு QR20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
உள்ளூர் பணப்பரிவர்த்தனை இல்லத்தின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியபடி, அதிகரிக்கப்பட்ட கட்டணம், கிளைகள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும் என்பதாக தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு, தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்ப இந்த கட்டணம் பொதுவாக மாறுபடும் என்றும் அவர் மேலும் கூறினார்.
உள்ளூர் சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தங்கள் சேவைகளின் விரிவாக்கத்தின் காரணமாக இந்த நிறுவனங்கள் எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க செலவினங்களின் ஒரு பகுதியை ஈடுசெய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அல் ஷார்க்கின் அறிக்கை கூறுகிறது. வாடிக்கையாளர்களுக்கு உயர்தர, போட்டித்தன்மை வாய்ந்த சேவைகளை வழங்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read: 2024ம் ஆண்டில் கத்தாரில் பணிபுரிய சிறந்த 20 கம்பனிகள் இவைகள் தான்!