FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2022 குளிர்காலத்தில் நடத்தப்படுவது ஏன்

FIFA 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கிறது. அதன்படி அமெரிக்கா, மெக்ஸிகோ, கன்னடா, கேமரூன், மொரோக்கோ, துனிசியா, செனகள், கானா, உருகுவே, ஈக்வடார், அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுக்கல், போலந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, செர்பியா, ஸ்பெயின், குரோசியா, பெல்ஜியம், பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, ஜப்பான், சவுதி அரேபியா, தென்கொரியா, ஈரான், கத்தார், வேல்ஸ், கோஸ்டா ரிகா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும்.

இப்போட்டிக்காக கத்தாரில் மொத்தம் 8 மைதானங்கள் தயார் நிலையில் இருக்கிறது. இந்த மைதானங்களில் போட்டி நடைபெற இருக்கும் நிலையில், 15 லட்சம் பேர் போட்டியை நேரில் பார்ப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கத்தார் நாட்டில் எதற்காக குளிர்காலத்தில் போட்டி நடத்தப்படுகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது இங்கு ஆண்டின் தொடக்கத்தில் வெப்பநிலையானது 41 டிகிரி செல்சியஸ் முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இத்தகைய வெப்பம் ஆபத்தானது என்பதால், 90 நிமிடங்கள் கூட மைதானத்தில் விளையாடுவதை யோசித்து கூட பார்க்க முடியாது.

Why the FIFA World Cup football tournament will be held in winter 2022

இந்நிலையில் கால்பந்து போட்டியின் ஏலத்தின் போது கத்தார் மைதானத்தில் ஏர் கண்டிஷனிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக கூறியுள்ளது. இந்த ஏர்கண்டிஷனிங் மூலம்‌ மைதானம் ஆனது 23 டிகிரி செல்சியஸ் வரை குளிர் விக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் FIFA கடந்த 2015-ம் ஆண்டு போட்டியை குளிர்காலத்தில் நடத்துவதற்கு முடிவு செய்துவிட்டது. மேலும் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக வரும் சுற்றுலா பயணிகளுக்கான ஹோட்டல்கள் போன்றவற்றை கத்தார் அரசு தயார் நிலையில் வைத்துள்ளது .

Also Visit: சவுதியின் பிரபல உணவகமான அல்பைக் உத்தியோக பூர்வமாக கத்தாரில் திறக்கப்பட்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *