கத்தார் திரும்பும் அனைவருக்கும் PCR பரிசோதனையை மீண்டும் கட்டாயமாக்கியுள்ளதாக பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கத்தார் திரும்ப விரும்பும் பயணிகள், தங்களது தாயங்களில் உள்ள அனுமதிக்கப்பட்ட மருத்துவ நிலையங்களில் 72 மணி நேரங்களிற்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட PRC பரிசோதனையின் படி எதிர்மறை (Negative) பெறுபேற்றைக் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையானது எதிர்வரும் 25ம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) முதல் பின்பற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆரம்ப சுகாதா மருத்துவக் கழகப் பணிப்பாளர் , மரியம் அலி அப்துல்-மாலிக் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, கத்தார் திரும்ப விரும்பும் பயணிகள் உள்ளூர் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியசாலைகளில் PCR பரிசோதனையை 72 மணித்தியாலங்களிற்குள் பெற்றிருக்க வேண்டும் என்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் PCR பரிசோதனை முடிவு (எதிர்மறை) பற்றி கத்தார் விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்படும் என்பதாக அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கத்தாரில் வாகன ஓட்டுநராக பணிபுரிவோருக்கு போக்குவரத்து துறையின் எச்சரிக்கைச் செய்தி!