கத்தாரில் பல்வேறு கோவிட் -19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற தவறிய 734 தனிநபர்கள் மீது இன்று (06.03.2021) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு (MOI) தெரிவித்துள்ளது.
பொது வெளியில், முகக்கவசம் அணியாததற்காக 705 பேர் மீதும், வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக ஏற்றியமைக்காக 14 பேர் மீதும், எஹ்தெராஸ் செயலியை நிறுவாததற்காக 7 நபர்கள் மீதும், மேலும் 8 பேர் பாதுகாப்பான சமூக தூரத்தை பராமரிக்காததற்காகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் கொரோனா மீண்டும் அதிகளவில் பரவி வரும் நிலையில், கத்தார் வாழ் அனைவரும் கொரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சுகாதார அமைச்சினால் வலியுறுத்தப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்றும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மீறும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.