Qatar First Electric Bus Servie Started
கத்தாரில் முதல் இலத்திரனியல் பொதுப்போக்குவரத்து பஸ் சேவை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் பொதுப் போக்குவரத்து நிறுவனம் (Mowasalat) இன்றைய தினம் (28.03.2022) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரதான பஸ் தரிப்பிடமான Al Ghanim நிலையத்திலிருந்து சிட்டி சென்டர் வரையிலான அனைத்து பஸ் சேவைகளும் இலத்திரனியல் பஸ்கள் மூலம் நடைபெறவுள்ளதாக Mowasalat தெரிவித்துள்ளது.
பசுமையான எதிர்காலம் என்ற திட்டத்தின் முக்கிய விடயங்களில் ஒன்றாக புகை அற்ற போக்குவரத்து சேவை நோக்கப்படுகின்றது. மேற்படி புகை அற்ற போக்குவரத்து சேவையில் முதல் முக்கிய அடைவாக இலத்திரனியல் பஸ் சேவை கணிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கத்தார் கால்ப்பந்து உலகக் கிண்ணம் நடைபெறும் மைதானங்களில் போக்குவரத்தை இலகுபடுத்த தானியங்கி இலத்திரனியல் பஸ்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கான சோதனையோட்டங்கள் அண்மைய காலங்களில் கட்டம் கட்டமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.