கத்தாரில் நேற்று தொடக்கம் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்ற நிலையில், வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சின் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
உள்துறை அமைச்சானது தனது உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அவை வருமாறு,
- வாகன சக்கரங்களின் தரங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
- வாகன ஓட்டுநர் மற்றும் பயணிகள் அனைவரும் சீட் பெல்ட்டை அவசியம் அணிந்து கொள்ளுங்கள்
- வாகனங்களை வேகத்தை வழமையை விட குறைத்துக் கொள்ளுங்கள்
- வாகனங்கள் பிரதான விளக்குகளையும், சமிஞ்சை விளக்குகளையும் சரி செய்து, அவற்றின் செயல்திறனை உறுதி செய்து கொள்ளுங்கள்
- வாகனங்களுக்கிடையில் பாதுகாப்பு தூரங்களை (5 to 10 meters) பின்பற்றுங்கள்
- பாதைகளில் வாகனங்களை செலுத்தும் போது உரிய ஒடுதளத்தில் (Lane) மாத்திரம் செலுத்துங்கள்
என்பதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.