கத்தாரில் பழைய நாணயத் தாள்களை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ம் திகதிக்குப் பிறகு கத்தாரின் வங்கிகளில் பழைய நாணயத்தாளகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் கடந்த வருடம் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி புதிய நாணயத்தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அறிமுகம் செய்யப்பட்டது முதல் பழைய நாணயத்தாள்களை அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டது. என்றாலும் பொது மக்களிடம் பாவணையில் இருந்த நாணயத்தாள்களை ஏற்றுக்கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டது.
மேற்படி பழைய நாணயத்தாள்களை ஒப்படைப்பதற்கான இறுதித்தினம் எதிர்வரும் 31ம் திகதி என்பதாக வங்கிகளினால், அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி தினத்தின் பின்னர் யாராவது பழைய நாயணத்தாகளை வைத்திருந்தால் அது பெறுமதியற்றதாகிவிடும் என்பதை கருத்திற்கொள்ளுமாறு வங்கிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.