Gulf News

அமீரகத்தில் வாரத்திற்கு நான்கரை நாள் வேலை : 2022 ஜனவரி முதல் புதிய நடைமுறை!

2022 ஜனவரி 1 முதல் வாரத்திற்கு நான்கரை நாள் வேலை முறைமையினை அறிமுகப்படுத்துவதாக ஐக்கிய அரபு இராச்சியம் (அமீரகம்) அறிவித்துள்ளது.

அதன்படி வெள்ளிக்கிழமை அரைநாள் வேலையும், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் விடுமுறையும் வழங்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம், உலகளாவிய ரீதியில் வாரத்துக்கு ஐந்து நாள் வேலை என்பதை விடவும் குறைவான தேசிய வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக அமீரகம் மாறியுள்ளது.

வேலை வாரம் திங்கள்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை நன்பகலுடன் முடிவடையும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான வேலை நேரம் காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை, ஒரு நாளைக்கு 8 1/2  வேலை நேரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஊழியர்கள் 4 1/2   மணி நேரம் பணிபுரிவார்கள்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இந்த நடவடிக்கை தொழில் -வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

UAE New Time for Government Offices

இதையும் படிங்க: பழைய நாணயத்தாள்களை வைத்திருப்போருக்கு கத்தாரிலுள்ள வங்கிகள் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

Related Articles

Leave a Reply

Back to top button
%d