கத்தார் பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெறவுள்ள மைதானப் பணிகள் நிறையும் தறுவாயை அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள கால்ப்பந்து உலகக் கிண்ணித்தின் இறுதிப் போட்டி லுசைல் மைதானத்தில் நடைபெற தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
மேற்படி லுசைல் மைதானத்தின் நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக சுப்ரீம் கொமிட்டி தெரிவித்துள்ளது. 2022ம் ஆண்டு கால்ப் உலகக் கிண்ணத்திற்காக கத்தார் எட்டு மைதானங்களை தயார் செய்து வருகிது. அதில் 5 மைதானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள 3 மைதானங்களின் நிர்மாணப்பணிகள் விரைவில் நிறைவடையும் என்பதாக சுப்ரீம் கொமிட்டி தெரிவித்துள்ளது.
இது வரையில் கலீபா சர்வதேச விளையாட்டரங்கள், அல் ஜனூப் விளையாட்டரங்கள், கல்வி நகர விளையாட்டரங்கள், அல்பைத் விளையாட்டரங்கள் மற்றும் அஹமத் பின் அலி விளையாட்டரங்கள் போன்றவை இது வரை நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன.
6வது விளையாட்டரங்கான அல் துமாமா விளையாட்டரங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திறக்கப்படவுள்ளது. ஏழாவது விளையாட்டரங்கம் ராஸ் அல் அபூ ஆகும். இது விரைவில் திறக்கப்பவுள்ளது. எட்டாவதும் இறுதியானதும் மைதானம் லுசைல் விளையாட்டரங்காகும். இதன் நிர்மாணப்பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், முதல் போட்டி மற்றும், இறுதிப் போட்டி உட்பட 10 போட்டிகள் இம்மைதானத்தில் இடம்பெறவுள்ளதோடு 80 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளைக் கண்டுகளிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கத்தாரில் இதைச் செய்து சிக்கினால் 10 ஆயிரம் றியால்கள் அபராதம் விதிக்கப்படுவீர்கள்!