கத்தார் வர்த்தக அமைச்சு, ஆடி (Audi Dealer) நிறுவனத்துடன் இணைந்து 2020 மற்றும் 2021ம் ஆண்டு உற்பத்திகளான Audi Q5, A6, S7, RS7 and A8 போன்ற வாகனங்களை சந்தையிலிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேற்படி வாகனத்தின் axle spring control lever ல் காணப்படும் குறைபாட்டினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியே மேற்கொள்ளப்படுவதாக கத்தார் வர்த்தக அமைச்சு தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. மேலும் வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்த செய்ய கத்தார் வர்த்தக அமைச்சு முகவருடன் இணைந்து செயற்படும் என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்வனவு செய்யும் பொருட்கள் தொடர்பாக ஏதாவது புகார்கள் இருப்பின் அவற்றை வாடிக்கைாயாளர் பாதுகாப்பு மற்றும் எதிர்ப்பு வர்த்தமாக மோசடி திணைக்களத்துக்கு (Consumer Protection and Anti-Commercial Fraud Department) அறிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.