கத்தாரில் இன்றைய (மார்ச்-18) கொரோனா நிலவரம்! 499 புதிய நோயாளர்கள், சிகிச்சை பெறுபவர்கள் 12 ஆயிரத்தை தாண்டியது

கத்தாரில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 12458 ஆக அதிகாரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் (18.03.2021) மட்டும் புதிதாக 455 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில் இதுவரை 1,648,555 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 172,200 பேரே இதுவரை கொரோனா தெற்றினால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
மேலும் கொரேனா வைரஸ் காரணமாக கத்தாரில் இது வரை 270 பேர் மரணடைந்துள்ளார்கள் என்பதுடன், 159,472 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பொதுமக்கள் கொரோனாவிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முகக் கவசம் உட்பட சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *