கத்தாரில் பழைய நாணயத்தாள்களை வைத்திருப்போருக்கான முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. பழைய நாணயத்தாள்களை வைத்திருப்பவர்கள் ஜுலை மாதம் 1ம் திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளும் படியும், பழைய நாணயத்தாள்கள் ஜுலை மாதம் 1ம் திகதிக்குப் பின்னர் செல்லுபடியற்றதாகிவிடும் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டிருந்த நிலையிலும், பழைய நாயணத்தாள்கள் எதிர்வரும் 21.12.2021 வரை மாற்றிக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக கத்தார் வங்கிகள் தெரிவித்துள்ளது.
எனவே பழைய நாயணத்தாள்களை வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 31.12.2021 திகதிக்கு முன்னர், கத்தாரின் வங்கிகளில் நேரடியாக சென்றோ அல்லது, பணம் வைப்புச் செய்யும் இயந்திரங்களின் உதவியுடன் மாற்றிக்கொள்ள முடியும் என்பதாக கத்தார் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கத்தாரில் தற்போது பாவனையில் உள்ள புதிய நாணயத்தாள்கள் கடந்த தேசிய தினத்தன்று (18.12.2020) அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய நாணயத்தாள்கள் பாவனைக்கு வந்த பின்னர், ஏற்கனவே பாவனையிலிருந்த நாணயத்தாள்கள் அரசாங்கத்தினால் மீளப் பெறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கத்தாரில் விமான நிலையத்தில் பொதிகளை சோதனை செய்ய புதிய தொழில்நுட்பம்