FIFA அரபு கோப்பையின் எதிர்வரும் கூன்று பதிப்புக்களை கத்தாரில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2025, 2029 மற்றும் 2033 ஆம் ஆண்டுகளில் FIFA அரபு கோப்பை போட்டியின் வரவிருக்கும் மூன்று பதிப்புகளை கத்தார் நடத்தும் என்பதாக FIFA நிருவாகம் இன்று (2024.05.15) உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 74வது FIFA கவுன்சிலில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் இதும் ஒன்றாகும்.
“கத்தார் கால்பந்து சங்கத்தின் வேண்டுகோளின்படி, 2025, 2029 மற்றும் 2033 ஆம் ஆண்டுகளில் கத்தார் போட்டியை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளதாக FIFA தனது அறிக்கையில் அறிவித்துள்ளது.
1963ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றது. இது வரையில் 1963, 1964, 1966, 1982, 1985, 1988, 1992, 1998, 2002, 2009, 2012, 2021 ஆண்டுகளில் 10 தடவைகள் நடைபெற்றுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு 10வது பதிப்பை கத்தார் நடத்தியது. இதில் அரபுலகைப் பிரதிநிதித்துவப்படும் 16 நாடுகள் பங்கு பற்றின. இறுதியில் அல்ஜீரியா 2021ம் ஆண்டுக்கான கிண்ணத்தை சுபீகரித்தமை குறிப்பிடத்தக்கது.